Saturday, April 12, 2008

The Hare and the Tortoise Story



முயலும் ஆமையும் கதை (Hare and the Tortoise Story)

குழந்தகளா ! உங்களுக்கு இன்னிக்கு நான் முயலும் ஆமையும் கதை சொல்லப்போறேன்.

நீங்க முயலை ப்பாத்திருக்கீங்களா ! வேகமா ஒடும், நிக்காமா ஓடரதிலெ அத மிஞ்ச முடியாது. ஆமை அதுக்கு ஓடமுடியுமா !
முடியாதில்ல.. அது தன்னோட ஒடம்ப தூக்கிக்கிட்டு அசஞ்சு அசஞ்சு தான் கொஞ்சம் கொஞசமா நடந்து போகும்.

ஒரு நாளைக்கு முயல் வந்து ஆமை கிட்டே வந்து ' நீயும் நானும் ஒரு ஓட்டப் பந்தயத்திலே ஓடலாமா ? " அப்படின்னு கேட்டது.

ஆமைக்குத் தெரியும். தன்னாலே முயல்குட்டி மாதிரி ஓடமுடியாதுன்னு. ஆனா எதுக்கும் முயற்சி பண்ணி ப்பாப்போமேன்னு நினைச்சுட்டு, சரின்னு சொல்லிபோடுத்து.

சரி, நம்ம இரண்டு பேரும் நாளை காலைலே சூரியன் உதிக்கும்போது இங்க அரச மரத்திலேந்து ஓட ஆரம்பிப்போம். அங்க மலை உச்சி தெரியுதுல்லெ...அதுகிட்ட ஒரு கோவில்
தெரியுதுல்ல..அது வ‌ரைக்கும் போவ‌ணும் அப்ப‌டின்னு முய‌ல் சொல்லிச்சு. ச‌ரின்னு ஆமையும் ஒத்துகிட்ட‌து.

ச‌ரியா அடுத்த‌ நாள‌ன்னிக்கு முய‌லும் ஆமையும், ஓட‌ ஆர‌ம்பிச்ச‌துங்க‌.

ச‌ற்று நேர‌த்திலேயே முய‌ல் ரொம்ப‌ தூர‌ம் ஓடிப்போயிடுத்து. பின்னாடி திரும்பி பாத்த‌து. என்னாடா. ஆமைய காணோமே ! ச‌ரிதான். இங்க‌ வ‌ர‌வே இன்னும் ஒரு ம‌ணி நேர‌ம் ஆகும் போலே இருக்கு. ந‌ம்ம‌ உட‌னே ம‌லை உச்சிக்குப் போய் என்ன‌
செய்ய‌ப்போறோம். இங்கே எவ்வ‌ள‌வு அழ‌கா காத்து வ‌ர‌து ! ஒரு குட்டியா ஒரு தூக்க‌ம் போட்டுட்டு பின்னே ஓடினாலும் போதுமே .. அப்ப‌டின்னு ஒரு ம‌ர‌த்த‌டி நிழ‌லிலே ப‌டுத்த‌து. ஓடி வ‌ந்த களைப்பா ! உடனே தூங்கிப்போச்சு..

பின்னாடியே வந்த ஆமை அங்கு வந்து பாத்தப்போ முயல் தூங்கிச்சு இருந்தது.
ஆமை அடடா ! இது தான் சான்ஸ் , இத விட்டா இனி ஒரு தரம் முயல ஜயிக்கவே முடியாதுன்னு நினைச்சு, தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தது.

திடீரென முயல் குட்டி முழிச்சுப் பாத்தா, அடடா... என்னது மாலை நேரம் வந்துடுத்தே... சூரியன் மறைய ஆரம்பிச்சுட்டானே.. ஆமைய இன்னும் வல்லைபோல இருக்கு அப்படின்னு நினைச்சுகிட்டு, வேகமா ஓடி மலை உச்சியை அடஞ்சு, கோவில் பக்கம் போனது பாரு,, அங்க ஆமை அமக்களமா உக்காந்திருச்சு
நீ இப்ப‌தான் வ‌ரீகளா.. நான் வ‌ந்து 2 ம‌ணி நேர‌ம் ஆச்சே அப்ப‌டின்னு சொல்லிச்சு. முய‌ல் குட்டி பாவ‌ம், தான் தூங்கி ப்போன‌தினாலே தோத்துட்ட‌மே அப்ப‌டின்னு நினைச்சு த‌ன் தோல்விய‌ ஒத்துகிட்ட‌து.

குழ‌ந்தைகளே ! இதுலே என்ன தெரியுது !

முதல் பாயின்டு.. முயற்சி திருவினையாக்கும் அப்படின்னு வள்ளுவர் சொல்ராலில்லே.. எதுவுமே தன்னாலே முடியாதுன்னு நினைக்க கூடாது. என்னால் முடியும் அப்படின்னு நினைக்கணும் . முயலோடு போட்டி போடமுடியுமா அப்படின்னு
ஓட்ட பந்தயத்திற்கு ஒப்புக்காம இருந்துச்சின்னா ஆம jaயிச்சிருக்க முடியுமா ! எதுவுமே முயற்சி செஞ்சா முடியும் .. அப்படின்னு ஒரு நினைப்பு எப்பவுமே இருக்கணும்.

இரண்டாவது பாயின்டு . எப்பவுமே ஒரு வேலைய ஆரம்பிச்சிங்கன்னா அதுலே சோர்வு தொய்வு இருக்கக்கூடாது. நடுவிலே நடுவிலே சோம்பல் பட்டு, காரியத்தை
செய்வதிலே வேகத்தடை இருக்கக் கூடாது. இருந்துச்சுன்னா, முயல் தோத்துப்போனா மாதிரி தான் ஆகும். எத்தனை தான் உங்கிட்ட திறன் இருந்தாலும், அத சரியா பயன் படுத்தணும் . அப்பதான் வெற்றி கிடைக்கும்.

மூணாவது பாயிண்டு, எதிராளியோட சக்திய குறச்சு மதிப்பிடக்கூடாது. அவனுக்கு இருக்கும் சக்தி என்ன ? நம்ம வீக்னஸ் தான் அவனோட சக்தி. அத தெரிஞ்சுக்கணும்.
மெத்தனமா இருந்துட்டா கதி அதோகதி தான்.

இந்த மூணு பாயிண்டையும் நினைவிலே வச்சுக்கிட்டு எந்த காரியத்தையும் ஆரம்பிச்சிங்கன்னா வெற்றி உங்களுக்குத்தான் .. சந்தேகமே இல்ல ..




4 comments:

பாச மலர் / Paasa Malar said...

கதையுடன் கூடிய டிப்ஸ்..வாழ்க உங்கள் பணி..

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நல்ல விதயம் பாட்டியம்மா.
இரண்டு வகையில் பாராட்டு.
முதலில் வாண்டூஸ்'க்கு ஆத்திசூடி,கொன்றைவேந்தன்'லாம் சொல்வேன்'ன்னு சொல்லி இருப்பதற்கு.இந்த நல்ல விதயங்களை எல்லாம் தற்காலக் குழந்தைகளுக்கு சொல்ல யாருக்கும் அறிதலோ,நேரமோ இருப்பதில்லை.
இவற்றைப் பற்றி எல்லாம் எளிய தமிழில் எழுத வேண்டும் என நானே நினைத்துக் கொண்டிருந்தேன்.

இரண்டாவதாக,குழந்தைகள் அதன் மூலமாகவாவது தமிழ் படிப்பாங்க,உங்க வலைப்பக்கம் பார்ப்பதன்மூலம்.

பாராட்டுக்கள் பாட்டியம்மா.

Please remove word verification in comment settings.

திவாண்ணா said...

மாசம் 2 எல்லாம் போதாது பாட்டி!
அப்புறம் அறிவன் சொன்ன மாதிரி வார்த்தையை பாத்து எல்லாம் வாண்டுகளால எழுத முடியாது!
:-))

ராமலக்ஷ்மி said...

//முயற்சி திருவினையாக்கும் //

//நடுவிலே நடுவிலே சோம்பல் பட்டு, காரியத்தை செய்வதிலே வேகத்தடை இருக்கக் கூடாது.//

//எதிராளியோட சக்திய குறச்சு மதிப்பிடக்கூடாது.//

வெற்றிக்கு என்ன வழின்னு அழகாச் சொல்லியிருக்கிறீர்கள் பாட்டி. சின்னக் குழந்தைகளுக்குப் புரியும் நடையில் எல்லோருமே நடைமுறையில் கடைப் பிடிக்க வேண்டிய விஷயங்கள். [அதான் வளர்ந்த நீங்கெல்லாமும் என் குழந்தைகள்தானே, எல்லாருக்கும்தான் இந்தக் கதை என நீங்கள் சொல்வது கேட்கிறது:))]