Sunday, April 6, 2008

பாட்டி என்ன சொல்கிறாள் ?

பாட்டி என்ன சொல்கிறாள் ?


ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒவ்வொரு வீட்டிலும் பாட்டி என்ன சொல்கிறாள்
என்பதை உன்னிப்பாக கவனிப்பது நமது மரபாம்.

கல்வி அறிவை மிஞ்சிய அனுபவம், அந்த அனுபவத்தின்
அடிப்படையில் அவர் சொல்லும் பழமொழிகள்
யதார்த்தத்தின் அடிப்படையில் அவர் தரும் புத்திமதிகள்
எப்படி எப்படி வீட்டுப் பண்டிகைகளில் வரும் விருந்தினரை
உபசரிக்கவேண்டும் என்ற கோட்பாடுகள்,
பண்டிகைகளில் என்ன என்ன பட்சணங்கள் செய்யவேண்டும்
எப்படி செய்யவேண்டும் என துல்லியமான கருத்துக்கள்,
உடல் நோவடையும்போது முதல் உதவி வைத்தியங்கள் என்ன ?

குழந்தைகள் கற்க வேண்டியது என்ன ? இல்லறத்தோர் கடைப்பிடிக்க‌
வேண்டிய அறம் என்ன ? முதியோரது கடமைகள் என்ன ?

அன்பில் தொடங்கி ஆன்மீகம் வழியே ஓளடதம் வரை எல்லா விடயங்களையும்
இயன்றவரை ஈயலாம் என்பதே இப் பதிவின் நோக்கம்.

மாதம் இரு முறை பதிப்புகள் அமைந்திட வேண்டும் என குறியீடு.

க‌ருத்துக் கேட்போர் வ‌ர‌வேற்க‌ப்ப‌டுவ‌ர். க‌ருத்து உரைப்போர் இட‌மும் இதுவே.

5 comments:

Anonymous said...

All the best. Post/month looks like a long period ... :-)

paattiennasolkiral said...

thanks a lot.

தி. ரா. ச.(T.R.C.) said...

இன்னும் கொஞ்ச நாள் போனால் பாட்டி தாத்தாஉறவு என்பதே ஏட்டில் மட்டும்தான் இருக்கும். பாட்டியுடன் மொட்டைமாடியில் கதை கேட்ட நாளெல்லாம் கதையாகி போனதடா?

இது போன்ற பதிவுகளால் மறுபையும் துளிர் விடட்டும்

paattiennasolkiral said...

நம்ம காலத்திலே பாட்டி கதை மட்டுமா சொன்னாள்.? கூடவே நல்ல பண்புகளையும்
அல்லவா வளர்த்தார்கள்.! ஒவ்வொரு வாரமும் ஒரு நீதிக்கதை எழுதுகிறோம். உங்கள்
மழலைச் செல்வங்களைப் படிக்கச் சொல்லுங்கள்.

பாட்டி
தஞ்சை..

ராமலக்ஷ்மி said...

//மாதம் இரு முறை பதிப்புகள் அமைந்திட வேண்டும் என குறியீடு.//

பாட்டி மாதம் பலமுறை வந்து பார்த்துச் சென்று விட்டேன். எப்போது அடுத்த கதை? தாங்கள் கதை கூறும் போது கூடவே சொல்லும் கருத்துக்கள் பெரியவர்களுக்கும் பொருந்துமாறு அமைவது ஒரு சிறப்பம்சம். தொடரட்டும் மறுபடி தங்கள் பணி தங்கு தடையின்றி.