Monday, April 7, 2008

ஒரு தெனாலி ராமன் கதை

உங்களுக்கெல்லாம் ஒரு தெனாலி ராமன் கதை ஒன்று சொல்லப்போறேன். கிருஷ்ண தேவராயன்கிற ராஜாகிட்ட அந்த தெனாலி ராமன் ஒரு அமைச்சரா இருந்தார். ஒரு நாளைக்கு இரண்டு பேருக்கும் நடுவிலே வாய்சண்டை வந்துவிட்டது. தெனாலி ராமன் தான் சொன்னது தான் சரின்னு புடிவாதமா இருந்தாரு. ராஜாவுக்கு கோபம் தலை உச்சிக்குப் போயிடுத்து. "டேய் ! யாரங்கே ! இந்த தெனாலி ராமன் தலையை வெட்டுங்கடா " அப்படின்னு உத்தரவு போட்டுட்டாரு.
எல்லா மத்தவங்களெல்லாம் தெனாலி ராமனும் என்ன மாதிரி எல்லாம் கெஞ்சிப்பாத்தாலும் மன்னிப்பு கேட்டாலும் ராஜா " நான் சொன்னா சொன்னது தான்" அப்படின்னு சொல்லிப்போட்டாரு. நாளைக்கு காலைலே இவன் தலையை வெட்டுங்கன்னு சொல்லிப்புட்டு போயிட்டாரு.
மறு நாள் காலை வந்துச்சு. தலையை வெட்டறதுக்கு ஆட்க தயாரா நிக்கிறாங்க. அப்ப தெனாலி ராமன் " ராஜாவே ! நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன். என்ன விட்டுடுங்க " அப்படிங்கறாரு. அந்த
ராஜா உடனே "என்ன சொன்னாலும் செய்வியா "ன்னு கேட்ட்டாரு. சரிங்க‌
ந்னு சொல்றாரு தெனாலி. அப்ப இந்த குதிரையை பேச வையு பாப்போம், அப்ப நான் உன்ன விட்டுடறேன்னு சொல்றாரு. அதுக்கு, தெனாலி சொல்றாரு, " அப்படியே ராஜா, ஒரு வருசம் டயம் கொடுங்க " அப்படிங்கறாரு. ராஜாவுக்கு என்ன சொல்றதின்னே தெரியல்லே. நம்ம சொன்ன கன்டிசனுக்குத் தான் ஒத்துக்கிட்டானே.. இதுக்கு மேலே என்ன செய்ய அப்படின்னு நினைச்சுகினு, சரி, இவனை விட்டுடுங்க...ஆனா
ஒரு வருசத்துக்குள்ளே குதிர பேசல்லேன்னா இவன் கழுத்தை வெட்டிடுங்கன்னு உத்திரவு மாத்தி சொல்லிட்டு போயிட்டாரு.
சிப்பாய்கள் இவரை விட்டுட்டாங்க.. ஆனால் பக்கத்திலே இருக்கறவங்க எல்லாம் " ஏன் அய்யா தெனாலி ராமா, எப்படி நீ குதிரையை பேச வைக்க முடியும்னு சொல்லிப்போட்ட, குதிர என்னிக்காவது பேசுமா ! எப்படியும் நீ அம்போ தான் அப்படிங்கறாங்க..
அப்ப தெனாலி ராமன் சொல்றாரு. குழந்தைகளா ! கவனமா கேட்டுக்கங்க !
" அடேய் ! இப்ப இன்னிக்கு என் தலை தப்பறது தாண்டா ரொம்ப‌
முக்கியம். இந்த ஒரு வருச கெடு வாங்கி இருக்கேன்ல .. அதுலே எது வேணா நடக்கிலாம் டா, அடுத்த ஒரு வருசத்திலே இந்த ராஜா செத்துப்போயிடலாம், இல்ல, நான் செத்து போயிடலாம், இல்ல, இந்தக்குதிரையைத் தானே பேசச்சொன்னாரு, இது செத்து ப்போனாலும் போகலாம் அப்படின்னாரு.. "
" அப்படியா .." எல்லோரும் வாயைப் பிளந்தாங்க..
தெனாலி ராமன் சொல்றாரு.
" டேய் ! இன்னொன்னும் இருக்கடா ! ஒரு வேளை இந்தக் குதிரை
பேசினாலும் பேசுன்டா.. எதிர்காலத்திலே எது வேணாலும் நடக்குன்டா"
அப்படின்னாரு.
தெனாலி ராமனின் சமயோசித புத்தியைப் பாத்து எல்லோரும்
ஆச்சரியப் பட்டுப் போனாங்க..
குழந்தைகளா ! இதுலேந்து என்ன தெரியுது ! ஆபத்துக் காலத்துலே
டென்சன் ஆகாமே இருக்கணும், நிலைமையை புரிஞ்சுகினு, எப்படி
வெளிலே வரது, தன்னைக் காப்பாத்திக்கறதுன்னு தெரிஞ்சுகணும். அதனாலே நிதானமா யோசிக்கணும்
அதனாலே தான் சொல்றாக ... கூல்...கூல் அப்படின்னு.
மனசே கூலா வச்சுக்கங்க..




1 comment:

ராமலக்ஷ்மி said...

//அதனாலே தான் சொல்றாக ... கூல்...கூல் அப்படின்னு.
மனசே கூலா வச்சுக்கங்க..//

இது கூட, குழந்தைகளை விடவும் இந்த அவசர கணினி யுகத்தில் நிற்க இருக்க நேரமின்றி எந்நேரமும் ஓடிக் கொண்டு எதற்கெடுத்தாலும் டென்ஷனாகிக் கொண்டு இருப்பவர் திரும்பத் திரும்பச் சொல்லி தங்களை நிதானித்துக் கொள்வதற்கான தாரக மந்திரம்.