Saturday, April 12, 2008

The Hare and the Tortoise Story



முயலும் ஆமையும் கதை (Hare and the Tortoise Story)

குழந்தகளா ! உங்களுக்கு இன்னிக்கு நான் முயலும் ஆமையும் கதை சொல்லப்போறேன்.

நீங்க முயலை ப்பாத்திருக்கீங்களா ! வேகமா ஒடும், நிக்காமா ஓடரதிலெ அத மிஞ்ச முடியாது. ஆமை அதுக்கு ஓடமுடியுமா !
முடியாதில்ல.. அது தன்னோட ஒடம்ப தூக்கிக்கிட்டு அசஞ்சு அசஞ்சு தான் கொஞ்சம் கொஞசமா நடந்து போகும்.

ஒரு நாளைக்கு முயல் வந்து ஆமை கிட்டே வந்து ' நீயும் நானும் ஒரு ஓட்டப் பந்தயத்திலே ஓடலாமா ? " அப்படின்னு கேட்டது.

ஆமைக்குத் தெரியும். தன்னாலே முயல்குட்டி மாதிரி ஓடமுடியாதுன்னு. ஆனா எதுக்கும் முயற்சி பண்ணி ப்பாப்போமேன்னு நினைச்சுட்டு, சரின்னு சொல்லிபோடுத்து.

சரி, நம்ம இரண்டு பேரும் நாளை காலைலே சூரியன் உதிக்கும்போது இங்க அரச மரத்திலேந்து ஓட ஆரம்பிப்போம். அங்க மலை உச்சி தெரியுதுல்லெ...அதுகிட்ட ஒரு கோவில்
தெரியுதுல்ல..அது வ‌ரைக்கும் போவ‌ணும் அப்ப‌டின்னு முய‌ல் சொல்லிச்சு. ச‌ரின்னு ஆமையும் ஒத்துகிட்ட‌து.

ச‌ரியா அடுத்த‌ நாள‌ன்னிக்கு முய‌லும் ஆமையும், ஓட‌ ஆர‌ம்பிச்ச‌துங்க‌.

ச‌ற்று நேர‌த்திலேயே முய‌ல் ரொம்ப‌ தூர‌ம் ஓடிப்போயிடுத்து. பின்னாடி திரும்பி பாத்த‌து. என்னாடா. ஆமைய காணோமே ! ச‌ரிதான். இங்க‌ வ‌ர‌வே இன்னும் ஒரு ம‌ணி நேர‌ம் ஆகும் போலே இருக்கு. ந‌ம்ம‌ உட‌னே ம‌லை உச்சிக்குப் போய் என்ன‌
செய்ய‌ப்போறோம். இங்கே எவ்வ‌ள‌வு அழ‌கா காத்து வ‌ர‌து ! ஒரு குட்டியா ஒரு தூக்க‌ம் போட்டுட்டு பின்னே ஓடினாலும் போதுமே .. அப்ப‌டின்னு ஒரு ம‌ர‌த்த‌டி நிழ‌லிலே ப‌டுத்த‌து. ஓடி வ‌ந்த களைப்பா ! உடனே தூங்கிப்போச்சு..

பின்னாடியே வந்த ஆமை அங்கு வந்து பாத்தப்போ முயல் தூங்கிச்சு இருந்தது.
ஆமை அடடா ! இது தான் சான்ஸ் , இத விட்டா இனி ஒரு தரம் முயல ஜயிக்கவே முடியாதுன்னு நினைச்சு, தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தது.

திடீரென முயல் குட்டி முழிச்சுப் பாத்தா, அடடா... என்னது மாலை நேரம் வந்துடுத்தே... சூரியன் மறைய ஆரம்பிச்சுட்டானே.. ஆமைய இன்னும் வல்லைபோல இருக்கு அப்படின்னு நினைச்சுகிட்டு, வேகமா ஓடி மலை உச்சியை அடஞ்சு, கோவில் பக்கம் போனது பாரு,, அங்க ஆமை அமக்களமா உக்காந்திருச்சு
நீ இப்ப‌தான் வ‌ரீகளா.. நான் வ‌ந்து 2 ம‌ணி நேர‌ம் ஆச்சே அப்ப‌டின்னு சொல்லிச்சு. முய‌ல் குட்டி பாவ‌ம், தான் தூங்கி ப்போன‌தினாலே தோத்துட்ட‌மே அப்ப‌டின்னு நினைச்சு த‌ன் தோல்விய‌ ஒத்துகிட்ட‌து.

குழ‌ந்தைகளே ! இதுலே என்ன தெரியுது !

முதல் பாயின்டு.. முயற்சி திருவினையாக்கும் அப்படின்னு வள்ளுவர் சொல்ராலில்லே.. எதுவுமே தன்னாலே முடியாதுன்னு நினைக்க கூடாது. என்னால் முடியும் அப்படின்னு நினைக்கணும் . முயலோடு போட்டி போடமுடியுமா அப்படின்னு
ஓட்ட பந்தயத்திற்கு ஒப்புக்காம இருந்துச்சின்னா ஆம jaயிச்சிருக்க முடியுமா ! எதுவுமே முயற்சி செஞ்சா முடியும் .. அப்படின்னு ஒரு நினைப்பு எப்பவுமே இருக்கணும்.

இரண்டாவது பாயின்டு . எப்பவுமே ஒரு வேலைய ஆரம்பிச்சிங்கன்னா அதுலே சோர்வு தொய்வு இருக்கக்கூடாது. நடுவிலே நடுவிலே சோம்பல் பட்டு, காரியத்தை
செய்வதிலே வேகத்தடை இருக்கக் கூடாது. இருந்துச்சுன்னா, முயல் தோத்துப்போனா மாதிரி தான் ஆகும். எத்தனை தான் உங்கிட்ட திறன் இருந்தாலும், அத சரியா பயன் படுத்தணும் . அப்பதான் வெற்றி கிடைக்கும்.

மூணாவது பாயிண்டு, எதிராளியோட சக்திய குறச்சு மதிப்பிடக்கூடாது. அவனுக்கு இருக்கும் சக்தி என்ன ? நம்ம வீக்னஸ் தான் அவனோட சக்தி. அத தெரிஞ்சுக்கணும்.
மெத்தனமா இருந்துட்டா கதி அதோகதி தான்.

இந்த மூணு பாயிண்டையும் நினைவிலே வச்சுக்கிட்டு எந்த காரியத்தையும் ஆரம்பிச்சிங்கன்னா வெற்றி உங்களுக்குத்தான் .. சந்தேகமே இல்ல ..




Monday, April 7, 2008

ஒரு தெனாலி ராமன் கதை

உங்களுக்கெல்லாம் ஒரு தெனாலி ராமன் கதை ஒன்று சொல்லப்போறேன். கிருஷ்ண தேவராயன்கிற ராஜாகிட்ட அந்த தெனாலி ராமன் ஒரு அமைச்சரா இருந்தார். ஒரு நாளைக்கு இரண்டு பேருக்கும் நடுவிலே வாய்சண்டை வந்துவிட்டது. தெனாலி ராமன் தான் சொன்னது தான் சரின்னு புடிவாதமா இருந்தாரு. ராஜாவுக்கு கோபம் தலை உச்சிக்குப் போயிடுத்து. "டேய் ! யாரங்கே ! இந்த தெனாலி ராமன் தலையை வெட்டுங்கடா " அப்படின்னு உத்தரவு போட்டுட்டாரு.
எல்லா மத்தவங்களெல்லாம் தெனாலி ராமனும் என்ன மாதிரி எல்லாம் கெஞ்சிப்பாத்தாலும் மன்னிப்பு கேட்டாலும் ராஜா " நான் சொன்னா சொன்னது தான்" அப்படின்னு சொல்லிப்போட்டாரு. நாளைக்கு காலைலே இவன் தலையை வெட்டுங்கன்னு சொல்லிப்புட்டு போயிட்டாரு.
மறு நாள் காலை வந்துச்சு. தலையை வெட்டறதுக்கு ஆட்க தயாரா நிக்கிறாங்க. அப்ப தெனாலி ராமன் " ராஜாவே ! நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன். என்ன விட்டுடுங்க " அப்படிங்கறாரு. அந்த
ராஜா உடனே "என்ன சொன்னாலும் செய்வியா "ன்னு கேட்ட்டாரு. சரிங்க‌
ந்னு சொல்றாரு தெனாலி. அப்ப இந்த குதிரையை பேச வையு பாப்போம், அப்ப நான் உன்ன விட்டுடறேன்னு சொல்றாரு. அதுக்கு, தெனாலி சொல்றாரு, " அப்படியே ராஜா, ஒரு வருசம் டயம் கொடுங்க " அப்படிங்கறாரு. ராஜாவுக்கு என்ன சொல்றதின்னே தெரியல்லே. நம்ம சொன்ன கன்டிசனுக்குத் தான் ஒத்துக்கிட்டானே.. இதுக்கு மேலே என்ன செய்ய அப்படின்னு நினைச்சுகினு, சரி, இவனை விட்டுடுங்க...ஆனா
ஒரு வருசத்துக்குள்ளே குதிர பேசல்லேன்னா இவன் கழுத்தை வெட்டிடுங்கன்னு உத்திரவு மாத்தி சொல்லிட்டு போயிட்டாரு.
சிப்பாய்கள் இவரை விட்டுட்டாங்க.. ஆனால் பக்கத்திலே இருக்கறவங்க எல்லாம் " ஏன் அய்யா தெனாலி ராமா, எப்படி நீ குதிரையை பேச வைக்க முடியும்னு சொல்லிப்போட்ட, குதிர என்னிக்காவது பேசுமா ! எப்படியும் நீ அம்போ தான் அப்படிங்கறாங்க..
அப்ப தெனாலி ராமன் சொல்றாரு. குழந்தைகளா ! கவனமா கேட்டுக்கங்க !
" அடேய் ! இப்ப இன்னிக்கு என் தலை தப்பறது தாண்டா ரொம்ப‌
முக்கியம். இந்த ஒரு வருச கெடு வாங்கி இருக்கேன்ல .. அதுலே எது வேணா நடக்கிலாம் டா, அடுத்த ஒரு வருசத்திலே இந்த ராஜா செத்துப்போயிடலாம், இல்ல, நான் செத்து போயிடலாம், இல்ல, இந்தக்குதிரையைத் தானே பேசச்சொன்னாரு, இது செத்து ப்போனாலும் போகலாம் அப்படின்னாரு.. "
" அப்படியா .." எல்லோரும் வாயைப் பிளந்தாங்க..
தெனாலி ராமன் சொல்றாரு.
" டேய் ! இன்னொன்னும் இருக்கடா ! ஒரு வேளை இந்தக் குதிரை
பேசினாலும் பேசுன்டா.. எதிர்காலத்திலே எது வேணாலும் நடக்குன்டா"
அப்படின்னாரு.
தெனாலி ராமனின் சமயோசித புத்தியைப் பாத்து எல்லோரும்
ஆச்சரியப் பட்டுப் போனாங்க..
குழந்தைகளா ! இதுலேந்து என்ன தெரியுது ! ஆபத்துக் காலத்துலே
டென்சன் ஆகாமே இருக்கணும், நிலைமையை புரிஞ்சுகினு, எப்படி
வெளிலே வரது, தன்னைக் காப்பாத்திக்கறதுன்னு தெரிஞ்சுகணும். அதனாலே நிதானமா யோசிக்கணும்
அதனாலே தான் சொல்றாக ... கூல்...கூல் அப்படின்னு.
மனசே கூலா வச்சுக்கங்க..




Sunday, April 6, 2008

பாட்டி என்ன சொல்கிறாள் ?

பாட்டி என்ன சொல்கிறாள் ?


ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒவ்வொரு வீட்டிலும் பாட்டி என்ன சொல்கிறாள்
என்பதை உன்னிப்பாக கவனிப்பது நமது மரபாம்.

கல்வி அறிவை மிஞ்சிய அனுபவம், அந்த அனுபவத்தின்
அடிப்படையில் அவர் சொல்லும் பழமொழிகள்
யதார்த்தத்தின் அடிப்படையில் அவர் தரும் புத்திமதிகள்
எப்படி எப்படி வீட்டுப் பண்டிகைகளில் வரும் விருந்தினரை
உபசரிக்கவேண்டும் என்ற கோட்பாடுகள்,
பண்டிகைகளில் என்ன என்ன பட்சணங்கள் செய்யவேண்டும்
எப்படி செய்யவேண்டும் என துல்லியமான கருத்துக்கள்,
உடல் நோவடையும்போது முதல் உதவி வைத்தியங்கள் என்ன ?

குழந்தைகள் கற்க வேண்டியது என்ன ? இல்லறத்தோர் கடைப்பிடிக்க‌
வேண்டிய அறம் என்ன ? முதியோரது கடமைகள் என்ன ?

அன்பில் தொடங்கி ஆன்மீகம் வழியே ஓளடதம் வரை எல்லா விடயங்களையும்
இயன்றவரை ஈயலாம் என்பதே இப் பதிவின் நோக்கம்.

மாதம் இரு முறை பதிப்புகள் அமைந்திட வேண்டும் என குறியீடு.

க‌ருத்துக் கேட்போர் வ‌ர‌வேற்க‌ப்ப‌டுவ‌ர். க‌ருத்து உரைப்போர் இட‌மும் இதுவே.